அரசு பஸ் கண்டக்டருக்கு அடி – உதை. டிரைவர் கைது

கோவை ஆகஸ்ட் 2 நீலகிரி மாவட்டம். கோத்தகிரியை சேர்ந்தவர் அசோக் ( வயது 30) இவர் கோவையில் அரசு போக்குவரத்து கழகபஸ்சில்கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்,இவரிடம் அதே போக்குவரத்து கழகத்தில் தற்காலிக டிரைவராக பணியாற்றி வரும்,பூ மார்க்கெட் ,மெக்ரிகர் ரோட்டைசேர்ந்த சபரி (வயது 35) என்பவர் பணம் கேட்டார்.அசோக் கொடுக்க மறுத்ததால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் அசோக் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் வழக்கு பதிவு செய்து டிரைவர் சபரியை. கைது செய்தார் இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.