ஐ.டி .இன்ஜினியர் வீட்டில் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி திருட்டு.

கோவை ஆகஸ்ட் 2 கோவை அருகே உள்ள வெள்ளலூர் தேனீஸ்வரர் நகரை சேர்ந்தவர் ராம்குமார் ( வயது 36) இவர் சென்னையில் உள்ள ஐ.டி . என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடத்த 28ஆம் தேதி வீட்டை ப பூட்டிவிட்டு மனைவி குழந்தைகளுடன் சென்னையில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த வெள்ளி கொலுசு தங்க மோதிரம்திருடப்பட்டிருந்தது .இது குறித்து ராம்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.