ரயில்வே கேட்டரிங் ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி 3.70 லட்சம் மோசடி

கோவை ஆகஸ்ட் 2 கோவை கிணத்துக்கடவு ஏழூர்பக்கம் உள்ள வடபுதூரைச் சேர்ந்தவர் பாக்யராஜ் ( வயது 41)இவரிடம் இந்திய ரயில்வேயில் கேட்டரிங்ஒப்பந்த வாங்கித் தருவதாக கூறி தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்த மவுரிஸ், நித்தியா ஆகியோர் 3 லட்சத்து 70 ஆயிரத்து 100 வாங்கினார்கள்.ஒப்பந்தம் எதுவும் வாங்கிக் கொடுக்காமல் பணத்தை மோசடி செய்து விட்டனர் இது குறித்து பாக்யராஜ் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மவுரிஸ் நித்யா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.