கோவைரேஸ்கோர்சில் கைக்கடிகார கடைக்கு வந்த கிரிக்கெட் வீரர் டோனி

கோவை ஆகஸ்ட் 4 இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் டோனி இவர் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அவர் காரில் புறப்பட்டு தனியார் ஒட்டலுக்கு சென்றார். அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மாலை 4 மணியளவில் கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு கைக்கடிகார கடைக்குச் சென்றார். அங்கு தனக்கு பிடித்தமான கைக்கடிகாரம் வாங்கினார் .அங்கு டோனி வந்த தகவலை அறிந்ததும் ரசிகர்கள் திரண்டனர் .அவர்கள் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள்கடை முன் திரண்டனர் .அரை மணி நேரம் வரை கடைக்குள் இருந்த டோனி பின்னர் வெளியே வந்து காரில் புறபட்டார். அப்போது அவரை பார்த்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து கூச்சலிட்டனர். மேலும் அவர்கள் டோனியை பார்த்து கை அசைத்தபடி தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதை யடுத்து டோனி காரில் தொண்டாமுத்தூர் நோக்கிச் சென்றார் .நேற்று இரவு அங்குள்ள தனியா ரிசார்ட்டில் தங்கினார். இ ன்று (திங்கட்கிழமை) மதியம் 2 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.