கோவை ஆகஸ்டு 4 கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்தவர் மதன் கண்ணன் (வயது 37) கோவில்பாளையத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 30) மதுரையை சேர்ந்தவர் கோபிநாத் ( வயது 34 )இவர்கள் 3 பேரும் கோவையில்இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சரவணம்பட்டி போலீசார்கைது செய்தனர். தொடர்ந்து இவர்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார் .இதை யடுத்து 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் இதேபோல கணபதியைச் சேர்ந்த வர் அருண்குமார் ( வயது 29) இவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். ரத்தினபுரியை சேர்ந்தவர் சுஜி மோகன் (வயது 29) இவர் மீதும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது .எனவே இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபோலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்தார். இதை யடுத்து 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் நேற்று வழங்கப்பட்டது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0