மருதமலை அடிவாரத்தில் கஞ்சா விற்றவர் கைது

கோவை ஆகஸ்ட் 4 கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரம் பகுதியில் வடவள்ளி சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்குள்ள கல்யாண மண்டபம் அருகே சந்தேகப்படும் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார்.. அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர்கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் மருதமலை அடிவாரம் லெப்ரசி காலனியை சேர்ந்த கோவிந்தன் (வயது 56) என்பது தெரியவந்தது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.