டாஸ்மாக் பாரில் அதிகாலையில் மது விற்ற 2ஊழியர் கைது

கோவை ஆகஸ்ட் 4 கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி நேற்று அதிகாலையில் உக்கடம் பெரிய கடை வீதி -லங்கா கார்னர்பகுதியில் உள்ளடாஸ்மாக் பாரில் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து கள்ள சந்தையில்விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇது தொடர்பாக ரத்தினபுரி, நாராயணசாமி வீதியைச் சேர்ந்த கருப்பசாமி ( வயது 48) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் (வயது 19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் அந்த பாரில் ஊழியராக வேலை செய்து வருகிறார்கள். இவர்களிடமிருந்து 22 மது பாட்டில்களும் மது விற்ற பணம் ரூ10 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.