மரத்தில் பைக் மோதி 2தொழிலாளி பரிதாப சாவு

.கோவை ஆகஸ்ட் 5 திருவண்ணாமலையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வல்லரசு வயது 25 இவர் கோவை வடவள்ளியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார் அதே திருவண்ணாமலையை சேர்ந்தவர் வாசுதேவன்.இவரது மகன் மகன் ஆனந்த் ( வயது 25) இவர் கருமத்தம்பட்டி அருகே பொன்னே கவுண்டன் புதூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். வல்லரசு நேற்று முன்தினம் வடவள்ளியில் இருந்து பொன்னே கவுண்டன் புதூருக்கு வந்தார். பின்னர் அவர் தனது நண்பர் ஆனந்துடன் அன்னூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார் .மோட்டார் சைக்கிளை ஆனந்த் ஓட்டினார். வல்லரசு பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் தென்னம்பாளையம் அன்னூர் ரோடு, எம் ராயர்பாளையம் அருகே சென்றபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்தது .இதனால் தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள் சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது .அதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் 2 பேரும் இறந்துவிட்டனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.