கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறையில் புகுந்து செல்போன் -லேப்டாப் கொள்ளை

.கோவை ஆகஸ்ட் 5 கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள அத்தப்பாலத்தைச் சேர்ந்தவர் அணில் குமார். இவரது மகன் ஆதித்யா நா ராயணன் ( வயது 18) இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ( எலக்ட்ரானிக்ஸ்) 2-ம் ஆண்டு படித்து வருகிறார். உடையாம்பாளையம் மேற்கு விநாயகர் கோவில் வீதியில் தனது நண்பர்கள் ஹரி பெருமாள் ,ஸ்ரீ ஹரி ஆகியோருடன் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்கள். நேற்று ஆதித்யா நாராயணன்மட்டும் வீட்டில் தனியாக இருந்தார் அப்போது 25 வயது மதிக்கத்தக்க 4பேர் அறைக்குள் புகுந்துஅவரை மிரட்டி அங்கிருந்த 3 செல்போன் ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர் .இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.