தூங்கும்போது அறைக்குள் புகுந்து செல்போன் திருடியவர் கைது

கோவை ஆகஸ்ட் 6 கோவை பாப்பநாயக்கன்பாளையம், பரமேஸ்வரன் லேஅவுட்டை சேர்ந்தவர் குமார் . இவரது மகன் சஞ்சய் (வயது 24 )இவர் தனது நண்பகளுடன் அங்கு அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று கதவை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்தனர் . அப்போது யாரோ ஒரு மர்ம ஆசாமிஉள்ளே புகுந்து அங்கிருந்த 2 செல்போன்களை திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து சஞ்சய் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து சரவணம்பட்டி பக்கம் உள்ள கீரணத்தம், குட்டி தோட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் (வயது 32) என்பவரை கைது செய்தார் .இவரிடம் இருந்து 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.