கோவைஆகஸ்ட் 8 “கிங்டம் ” திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களை அவதூறாக சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது.எனவே இந்த திரைப்படத்தை திரையிட நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் இந்த நிலையில் கோவை புரூக் பாண்ட் ரோட்டில்உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருக்கும் ஒரு தியேட்டரில் “கிங்டம் ” திரைப்படம் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சியினர் மாநில ஒருங்கிணைப்பாளர் இருகூர் சக்திவேல் முருகன் தலைமையில் ந அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் வணிக வளாகத்துக்குள் உள்ள தியேட்டரில் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆர். எஸ். புரம் ,போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தியேட்டரில் போராட்டத்தில் ஈடுபட்ட . 6 பெண்கள் உட்பட 66 பேரை கைது செய்தனர்.இவர்கள் போலீஸ் வேனில் ஏற்றி செல்லப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0