குட்கா விற்ற 2 வியாபாரி சிறையில் அடைப்பு

கோவை ஆகஸ்ட் 8 கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி நேற்று தடாகம் ரோடு, கே .என்.ஜி புதூர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள பேக்கரி அருகேதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ( குட்கா ) விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்தார்.விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியை சேர்ந்த காளிமுத்து ( வயது 47 )சென்னை சேர்ந்த அம்பித் விமல்ராஜ் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 65 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கோபால் என்பவரை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்டவியாபாரிகள் காளிமுத்து, விமல்ராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுகோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.