கோவை ஆகஸ்ட் 9 கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் அந்த பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் அந்த சிறுவனின் முகத்தில் உற்சாகம் மகிழ்ச்சி இருக்கும் .ஆனால் கடந்த சில நாட்களாக அந்த சிறுவன் முகத்தில் சோகம் இருந்தது. அதை கவனித்த பெற்றோர் அந்த சிறுவனிடம் அன்பாக பேசி நடந்தது குறித்து மெதுவாக கேட்டனர். அதற்கு அந்த சிறுவன்அளித்த பதில் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது அவர் படித்து வரும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் 36 வயதான ஒருவர் அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது ,இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் உடனடியாக அந்த பள்ளிக்கூடத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்டனர் அதற்கு அவர் சரியான பதில் தெரிவிக்கவில்லை.இது குறித்து போலீசில் புகார் செய்தனர்..போலீசார் விசாரணை நடத்தி போக் சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த ஆசிரியரை நேற்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0