பள்ளிக்கூடம் அருகே கஞ்சா ஆயில் -போதை மாத்திரை விற்பனை : வட மாநில வாலிபர் கைது

கோவை ஆகஸ்ட் 9 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று தடாகம் ரோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 45 கிராம் கஞ்சா ஆயில், 375 கிராம் போதை மாத்திரைகள், 4.5 கிராம் மெத்தம் பெட்டமின் என்ற உயரக போதைபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பென்சிலால் குத்தாரா ( வயது30 ) என்பது தெரியவந்தது இவர் தற்போது கணுவாய், வி.எம் டி நகரில் வசித்து வருகிறார்.இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.