பைக் மீது கார் மோதி மாஜி. விமானப்படை ஊழியர் பலி

கோவை ஆகஸ்ட் 16கோவையை அடுத்து சூலூர் பக்கம் உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் சூலூர் விமானப்படையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மாலை இவரது மோட்டார் சைக்கிளில் சூலூர் விமானப்படைத்தளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்தஒரு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிஹரன் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்