கோவை அருகே ரயில் மீது கல்வீச்சு. சிறுமி படுகாயம்.போலீசார் எச்சரிக்கை!!

கோவை ஆகஸ்ட் 16 கேரளாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போத்தனூரில் இருந்து மதுக்கரை வழியாக கேரளாவுக்குஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் மீது கல்வீசியதில் அதில் பயணம் செய்த 12 வயது சிறுமி படுகாயம்அடைந்தார். அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் ரயில் மீது கற்கள் வீசக்கூடாது என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் .இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்கூறியிருப்பதாவது:- போத்தனூர் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வாளையார் முதல் சோமனூர் வரை தண்டவாளத்தில் யாராவது கல் வைத்தாலோ? அல்லது ரயிலில் கல்வீசி பயணிகளுக்கு இடையூறு செய்தாலோ ? சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.