பைக் மோதிரோட்டில் நடந்து சென்ற மூதாட்டி பலி

கோவை ஆகஸ்ட் 19 கோவை ஆர் .எஸ் . புரம். தடாகம் ரோட்டில் உள்ள மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி ராஜம்மாள் ( வயது 72) இவர் நேற்று தடாகம் ரோட்டில் உள்ள மீனாட்சி நகரில் ஒரு வங்கியின் முன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார் ..இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரணையில் பைக் ஓட்டி வந்த நவாவூர், காமாட்சி அம்மன், கோவில் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் ( வயது 30)என்பது தெரிய வந்தது.இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.