குடிபோதையில் மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

கோவை. ஆக.20- கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவரது மகன் வருண் பிரபு ( வயது 22).
இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி மின் கணக்கிட்டு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் போத்தனூர்மகாலிங்கபுரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் .நகர் பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது வெள்ளலூர் எல்.ஜி. நகரை சேர்ந்த டேவிட் ராஜா ( வயது 27) என்பவர் குடிபோதையில் வருண் பிரபுவிடம் தகராறு செய்தார்.
மேலும் அவரை அவதூறாக பேசி தாக்கினார்.இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது இதுகுறித்து மின்வாரிய ஊழியர் வருண் பிரபு போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, டேவிட் ராஜா மீதுஅரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல் ,கொலை மிரட்டல் , தாக்குதல்ஆகிய பிரிவுகளில்வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.