தோட்டத்தில் 33 பன்றி குட்டிகள் திருடிய 2 பேர்கைது

கோவை ஆகஸ்ட் 20 கோவை அருகே உள்ள சுண்டக்காமுத்தூர், கோ- ஆப்ரேட்டிவ் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 25 | இவர் கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ஆறுமுகவுண்டர் என்பவர் தோட்டத்தில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார். சம்பவத்தன்றுஇவர் தூங்க சென்று விட்டார். அப்போது பண்ணையில் இருந்த 33 பன்றி குட்டிகளை யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து ராமச்சந்திரன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சூலூர் சேர்ந்த மணிகண்டன் (வயது 17)கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த ஹரிராம் ( வயது 19) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 33 பன்றி குட்டிகள் மீட்கப்பட்டது.