போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பாராட்டு.
கோவை, ஆக. 20 மாநில அளவிலான தமிழ்நாடு காவல் பணி திறனாய்வு போட்டி 2025 சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகடமியில் கடந்த 19ம் தேதி முதல் 4ம் தேதி வரை வரை நடைபெற்றது. இதில் கோவை உட்பட 33 மாவடங்களில் இருந்து வந்த பல்வேறு போலீஸ் பிரிவுகளில்உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. மோப்ப நாய் பிரிவில் இருந்து 63 நாய்கள் பங்கேற்றனர். அந்த நாய்களுக்கு வாகன சோதனை போட்டி, பேக் பரிசோதனை போட்டி, மனிதர்கள் போதை பெருட்களை கடத்தி வருவதை கண்டு பிடிக்கும் போட்டி, கட்டிட சோதனை போட்டி, பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருக்கும் பொருட்களை கண்டு படிக்கும் போட்டி ஆகிய 5 போட்டிகள் நடத்தப்பட்டது. மொத்தம் 72 பதக்கங்களில் 23 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலம் மற்றும் 14 சுழற்கேடயமும் வழங்கப்பட்டது. அதில்
கோவை மாநகர மோப்ப நாய் துறையில் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிலக்கச் செய்தல் பிரிவில் பெண் போலீஸ் முருகேஷ்வரி 1 தங்கப் பதக்கமும், துப்பறியும் நாய் படை பிரிவில் மதன்குமார் மற்றும் மோப்ப நாய் டைகர் 1 வெள்ளி பதக்கமும் பெற்றனர். அதேபோல கோவை மாநகர் போலீஸ் புகைப்பட போட்டியில் முதுநிலை புகைப்பட நிபணர் பிரசாத் ஒரு தங்கப் பதக்கத்தையும், சேம்பியன்சிப் சுழற்கேடயமும் பெற்று வெற்றி பெற்றார். அவர்கள் அனைவரையும் கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் நேரில் வரவழைத்துபாராட்டினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0