கோவை விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு விமானங்களும் சென்று வருகின்றன.
தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையத்தின் அலுவலக முகவரிக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இரவு 11 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த மெயிலை அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் மத்திய தொழிற் பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட. இமெயில் மூலம் அனுப்பப்பட்ட அந்த வெடிகுண்டு மிரட்டலில் அதை அனுப்பிய மர்ம நபர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்றும் விமான நிலையத்தின் அனைத்து சாப்ட்வேர்களையும் நான் ஹேக் செய்து வட்டேன் என்றும் கூறியிருந்தான். நேற்று இரவு 8:45 மணிக்கு அந்த இமெயில் மிரட்டல் வந்து உள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் புகார் அளித்ததை தொடர்ந்து மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மோப்பநாய் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை செய்தனர்.
அந்த நேரத்தில் இரவு 11 மணிக்கு சிங்கப்பூர் விமானமும் வந்தது. அதிலும் சோதனை நடத்தப்பட்டது. கார்கள் நிறுத்துப்பகுதி, பயணிகள் காத்திருக்கும் வரை, உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்நீண்ட நேரம் சோதனை நிலையில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.
இடைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நிம்மதி அடைந்தனர். வெடிகுண்டு ஆசாமி யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.