கியாஸ் நிரப்பும் இடத்தில் கார் எரிந்து நாசம்

கோவை ஆகஸ்ட் 21கோவை கவுண்டம்பாளையம், தோமையன் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 52 )கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரில்நேற்று தென்திருப்பதிக்கு சென்றார் .அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் வீரபாண்டி பிரிவு அருகே வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் இடத்துக்கு சென்றார். அங்கு காருக்கு கியாஸ் நிரப்பிவிட்டு ஸ்டார்ட் செய்தார் அப்போது திடீரென்று காரில் தீ பிடித்து எரிந்தது.உடனே அவர் காரில் இருந்து கீழே இறங்கினார் .இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கும்,தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது .இந்த தீபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது.இதுகுறித்துபெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.