கோவை ஆகஸ்ட் 21 இலங்கையை சேர்ந்தவர் லவசாந்தன் (வயது 36) இலங்கை அகதி .இவர் சென்னை உத்தண்டி பகுதியில் தங்கியிருந்தார் இவர் கோவையில் உள்ள ஏடிஎம் மையங்களில் ரகசிய குறியீடு எண்ணைபதிவு செய்யும் பகுதியில் சிறிய கேமராவை வைத்து மோசடியில் ஈடுபட்டார். அதாவது ஏடிஎம் கார்டை சொருகி பணம் எடுக்கும் போது ரகசிய குறியீட்டு எண்ணை கேமரா பதிவு செய்யும். அதனை வைத்து போலி ஏ.டி.எம் .கார்டு தயாரித்து லட்சக்கணக்கில் பணம் சுருட்ட தொடங்கினார். கோவையில் கடந்த 20 17 ,ஆம் ஆண்டுமற்றும் 20 18 -ஆம் ஆண்டுகளில் பல்வேறு ஏடிஎம் மையங்களில் இது போன்ற மோசடி நடைபெற்றுள்ளது. மொத்தம் 61 பேரின் வங்கி கணக்கிலிருந்து ரூ .38 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதுஇது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து லவ சாந்தனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 4-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமார் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அகதி லவச சாந்தனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார் .தண்டனை விதிக்கப்பட்ட லவ சாந்தன் திருச்சியில் உள்ள அகதிகளுக்கான சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0