கோவை ஆகஸ்ட் 21 கோவை மாவட்டம் காரமடை, எம்.ஜி.ஆர் .நகர் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன்கள் பூவரசன் ( வயது 17)கார்த்திக் ராஜா (வயது 15) இவர்களில் பூவரசன் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2படித்து வருகிறார்.கார்த்திக் ராஜா 10-ம்வகுப்பு படித்து வருகிறார்.பூவரசன் கடந்த 18-ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் தனது தந்தைக்கு தெரியாமல் ரூ 6 ஆயிரம் எடுத்து விட்டாராம் .இதை தந்தை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த பூவரசன் தனது தம்பி கார்த்திக் ராஜா மற்றும் அதே ஊரை சேர்ந்த தனது நண்பர் ஜெகதீஸ்வரன் ( வயது 17) ஆகியோருடன் எங்கோமாயமாகி விட்டார். இது குறித்து ராமகிருஷ்ணன் காரமடைபோலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0