நீலகிரி மாவட்ட உதகை
சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்டி
பகுதியில் மக்களுடன் ஸ்டாலின் முகாமினை
சேலூர் பேரூராட்சி தலைவர் கௌரி தலைமையில் பேரூராட்சி துணைத் தலைவர் பிரகாஷ் குமார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில், மக்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமினை சேலூர் பேரூராட்சி தலைவர் கௌரி குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார், உடன் 11 ஊர்களின் தலைவர்கள், மற்றும் பகுதி பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்ஷத் இடைநிலை
அலுவலர் மாதவன் மற்றும்
பேரூராட்சிகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்,
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் அனைத்து ஏற்பாடுகளையும் இடைநிலை அலுவலர் மாதவன் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்,
முகாமிற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளப்பட்டிருந்தன, நடைபெற்ற 11 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாமிற்கு ஆறு ஊர்களை சேர்ந்த ஊர் தலைவர்கள் வெங்கையா கவுண்டர், காமராஜர், போஜன், தோனன், சிராங்கி, கணேஷ், தெரை, ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை சிறப்பித்தனர்,
மற்றும் 11 கிராம பகுதியில் இருந்து வருகை தந்த மக்களின் மனுக்களை சேலூர் பேரூராட்சி துணைத் தலைவர் பிரகாஷ் குமார் நேரடியாக மக்களை அணுகி அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி
முகாமில் உள்ள அரசு துறை அலுவலர்களிடம் மனுக்களை ஒப்படைக்க மக்களுக்கு உதவிகளை செய்து தந்தார்,
மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் டி கே மூர்த்தி, சௌமியா சிங், ஸ்வேதா, ஸ்ரீகாந்த், சுரேஷ், வி ஜி சரஸ்வதி, ஆகிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளிலிருந்து வந்த அனைத்து மக்களின் கோரிக்கை மனுகளை பெற்று தேவையான ஆலோசனைகளை வழங்கி மக்களுக்கு உதவி மேற்கொண்டனர், இந்த முகாம் காலை முதல் விறுவிறுப்பாக இயங்கியது முகாமிற்கு சுமார் 11 கிராமங்களில் இருந்து 2000கும் மேலான ஆண்கள் பெண்கள்
வருகை தந்தனர், நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் வீடு இல்லாத ஏழைஎளிய மலைவாழ் மக்களுக்கு
வீட்டுமனை பட்டா ரேஷன் கார்டுகள்
இல்லாதவர்களுக்கு
மற்றும் விவசாயி
களுக்கு விவசாய கருவிகள்
ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது முகாமிற்கு வந்த மக்கள் ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் பல சிகிச்சைகளுக்கு ஆலோசனை பெற்று பயனடைந்தனர், மகளிர் உரிமைத்தொகை ஆயிரத்திற்கும் மேலான மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டன, இந்த முகாமில் தூய்மை பணி காவலர்கள் ஏழை மக்கள் இதுவரை நேரடியாக அரசு அலுவலர்களுக்கு சென்று மனுக்களை வழங்க முடியாமல் இருந்தவர்கள் தற்போது உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமிற்கு வருகை தந்து தங்களது அடிப்படை வசதிகளின் மனுக்களை ஏராளமானூர் வழங்கியுள்ளனர், உதகை சேலூர் பேரூராட்சிக்கு இந்த சிறப்பு திட்ட முகாமை வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு சேலூர் பேரூராட்சி துணைத் தலைவர் பிரகாஷ் குமார் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர், நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள்,
மக்களின் விண்ணப்பங்களை பெற்று உடனடி தீர்வுகளை வெளியிட்டுத் தந்தனர், நடைபெற்ற முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் சேலூர் பேரூராட்சி தலைவர் கௌரி, துணைத் தலைவர் பிரகாஷ் குமார், இடைநிலை அலுவலர் மாதவன் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர், பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்,

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





