கமிஷனர் சரவண சுந்தர் தகவல்.கோவை ஆகஸ்ட் 26 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி 712 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளுக்கு தேவையான பாதுகாப்புகள் அளிக்கப்படும். பாதுகாப்புக்காக 1,800 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். குனியமுத்தூரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மற்ற பகுதிகளிலும் நடைபெறும் சிலை கரைக்கப்படும் முதலாம் நாள் மற்றும் 3-வது நாள் 5-வது நாள் ஆகிய நாட்களில் ஊர்வலச் செல்லும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். பிரச்சனைக்குரிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த பகுதிகளில் போலீஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.அதி விரைவுப் படை (ஆர்.ஏ. எப்) தமிழ்நாடு சிறப்பு காவல் படையும் பாதுகாப்புக்கு குவிக்கப்படுகிறது. சாலை மற்றும் மேம்பால பணிக்காக கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் அகற்றப்பட்டன. தற்போது அவிநாசி ரோடு மேம்பாலத்தின் மேல் பகுதி மற்றும் சிக்னல் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் மாநகராட்சியுடன் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை அமைக்கப்படும். மொத்தம் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது .அதி வேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அபர ராதம் விதிக்கமுக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் 12 இடங்களில் இரவு பகல் என்று 24 மணி நேரமும் துல்லியமாக பதிவு செய்யும் நவீன கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0