கோவை ஆகஸ்ட் 26 கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் அருண்,சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் கோவை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா, ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமிஆகியோர் சேலம் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பீளமேடு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் திருப்பூர் மாநகருக்கும் ,திருப்பூர் மாநகர குற்றப்பிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ், தர்மபுரி இன்ஸ்பெக்டர் காளியப்பன், தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி ஆகியோர் கோவை மாநகருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவைகோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில் குமார் நேற்று பிறப்பித்துள்ளார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy1
Angry0
Dead0
Wink0