தண்டனை வழங்கியதால் நீதிமன்ற பூட்டை உடைத்த வாலிபர் கைது.

கோவை ஆகஸ்ட் 26 கோவை அருகே உள்ள மதுக்கரை தாலுகா அலுவலகத்தில் குற்றவியல் மற்றும் உரிமைகள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் பூட்டு கடந்த 16-ஆம் தேதி உடைக்கப்பட்டு ஆவணங்களை சிதறி கிடந்தன .இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திண்டுக்கலை சேர்ந்த பால் தினகரன் (வயது 35 )என்பவர் நீதிமன்ற பூட்டை உடைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் மீதான ஒரு வழக்கில் மதுக்கரை நீதிமன்றம் தண்டனை வழங்கியதால் ஆத்திரமடைந்து நீதிமன்ற பூட்டை உடைத்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.