தண்டவாளத்தில் கான்கிரீட் கல்லை வைத்து கோவை ரயிலைகவிழ்க்க சதி

கோவை ஆகஸ்ட் 26 திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2 – 05 மணி அளவில் கோவை ஆபராம்பாளையம் ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் கான்கிரீட் கல்கள் வைக்கப்பட்டு இருந்தது .அந்த கல் மீது ஏறிய ரயில் அதனை உடைத்து நொறுக்கியபடி சென்றது .இதனால் பயங்கர சத்தம் கேட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எஞ்சின் டிரைவர் இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதிர்ஷ்டவசமாக ரயிலுக்கோ பயணிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை .இது பற்ற தகவல் அறிந்ததும்கோவை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஆவாரம்பாளையம் பாலத்துக்கு அடியில் ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இரவில் இருள் சூழ்ந்து இருக்கும் பகுதி என்பதால் தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம ஆசாமிகளின் உருவம் கண்காணிப்பு காமராக்களில் சரியாக பதிவாகவில்லை. இருந்தாலும் கிடைத்த சில தடயங்களை வைத்து அவர்களை தேடி வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது :- கடந்த ஏப்ரல் மாதமும் இதே போல் மது குடித்த வாலிபர்கள் சிலர் தண்டவாளத்தில் கல்லை வைத்து சென்றனர். இப்போதும் அதுபோல நடந்து உள்ளதா? என விசாரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளம் அருகே 4 அடி நீளத்துக்கு ஒரு வழித்தடம் உள்ளது. அதனை ரயில்வே நிர்வாகம் சுவர் எழுப்பி அடைக்க வேண்டும் .ஏற்கனவே தற்கொலை சம்பவங்கள் இந்த இடத்தில் அதிகமாக நடைபெற்றுள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .கல் வைத்த மர்மஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.