நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், (25.08.2025) நடைபெற்ற
மக்கள் குறைதீர்க்கும் நாள்
கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்
லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து
வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன்,
சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 157 கோரிக்கை
மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள்
மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
அவர்கள் அலுவலர்களுக்கு
அறிவுறுத்தினார், இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், வருவாய்த்துறை
சார்பில், பல்வேறு இடங்களில் நடந்த வாகன விபத்தில் பெருங்காயம் அடைந்த
3 நபர்களுக்கு முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியிலிருந்து
ரூ.1.50 இலட்சம் பெறுவதற்கான (தலா ரூ.50,000/-) அனுமதி ஆணையினையும்,
சிறுகாயம் அடைந்த 1 நபருக்கு ரூ.10,000/- பெறுவதற்கான அனுமதி
ஆணையினையும், தமிழ்வளர்ச்சித்துறை சார்பில், 2025-2026 ஆம் ஆண்டிற்கான
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாளை
முன்னிட்டு பள்ளி அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற
2 மாணவிகளுக்கு முதல் பரிசு தொகையாக தலா ரூ.5,000/-மும், இரண்டாம்
பரிசாக 2 மாணவர்களுக்கு தலா ரூ.3,000/-மும், மூன்றாம் பரிசுத்தொகையாக
2 மாணவ, மாணவிக்கு தலா ரூ.2,000/-மும், சிறப்பு பரிசுத்தொகையாக
3 மாணவிகளுக்கு தலா ரூ.2,000/-மும், கல்லூரி அளவில் நடைபெற்ற
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 2 மாணவிகளுக்கு முதல் பரிசு தொகையாக
தலா ரூ.5,000/-மும், இரண்டாம் பரிசாக 2 மாணவர்களுக்கு தலா ரூ.3,000/-மும்,மூன்றாம் பரிசுத்தொகையாக 2 மாணவ, மாணவிக்கு தலா ரூ.2,000/-,
த்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன்,
தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட
வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக
உதவியாளர்கள் பழனிச்சாமி (நிலம்), கண்ணன் (கணக்குகள்) உட்பட
அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் உள்ளனர்,

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0