கோவை அரசு மருத்துவமனையில் தூக்குப்போட்டு வட மாநில வாலிபர் தற்கொலை

கோவை ஆகஸ்ட் 26 அசாம் மாநிலம் சுனித்பூரை சேர்ந்தவர் ஜெ.துப்பில் வரலா ( வயது 22 )இவர் கோவையில் தங்கி இருந்துகடந்த சில மாதங்களாக கூலி வேலை செய்து வந்தார்.இவர் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்.இதற்கு சிகிச்சை பெறுவதற்காக இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தபோது அவர்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இது குறித்த ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. -போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.தீராத தலைவலியால் இவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது,இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.