தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

கோவை ஆகஸ்ட் 29 நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பக்கம் உள்ள மடத்துறை சேர்ந்தவர் சுடலை ஆண்டி. இவரது மகன் செல்வம் முருகன் ( வயது 23)இவர் கோவை ரத்தினபுரி வ உ சி வீதியில் முருகேசன் என்பவருடன் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறையில் கதவைஉள் பக்கம் பூட்டிக் கொண்டு நைலான் கயிற்றை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து முருகேசன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.