பட்டியில் புகுந்து ஆட்டை கவ்வி சென்ற சிறுத்தை

கோவை செப்டம்பர் 2 கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு, கண்டக் கொரை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி ( வயது 70) விவசாயி. ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவர் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். அப்போது வன பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று இறை தேடி வந்தது அது ராமசாமி பட்டியில் புகுந்து ஒரு ஆட்டை கவ்வி கொண்டு இழுத்துச் சென்றது. இதை அறிந்த ராமசாமி மற்றும் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்தனர் தகவல் அறிந்த காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து ஆய்வு செய்தபோது அங்கு சிறுத்தையின் கால் தடங்கள் கண்டறியப்பட்டது. சிறுத்தையைபிடிக்க அந்த பகுதியில் வனப்பகுதியை ஒட்டி இரும்புக்கூண்டு வைத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.