பட்டப்பகலில்வீட்டில் பூட்டை உடைத்து வெள்ளி சாமான்கள் திருட்டு.

கோவை செப்டம்பர் 2 கோவை கணுவாய் அருகே உள்ள சோமையம் பாளையம், காஸ்மா வில்லேஜ் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி செல்வி (வயது 48)இவ நேற்று முன்தினம் பகலில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து செல்வி வடவள்ளி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.