ஏலசீட்டு நடத்தி ரூ38 லட்சம் மோசடி. பெண்ணுக்கு வலை!

கோவை செப்டம்பர் 3 கோவைஅருகே உள்ள வெள்ளலூர், பஜனை கோவில் வீதியைச் சேர்ந்தவர் குருபிரசாத் . இவரது மனைவி விஷ்ணு பிரியா ( வயது 29) இவர் வெள்ளலூர் கென்னடி வீதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மனைவி விமலா தேவிஎன்பவரிடம் ஏலச்சீட்டு போட்டிருந்தாராம்.சீட்டு முடிவடைந்த நிலையிலும் விஷ்ணு பிரியாவுக்கு கொடுக்க வேண்டிய ரூ38 லட்சத்தை கொடுக்காமல் விமலதேவி காலம் தாழ்த்தினாராம் .தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த விஷ்ணு பிரியா இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் விமலா தேவி மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.