குழந்தை ஏக்கத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை

கோவை செப்டம்பர் 5 கோவை,அரசூர் அருகே உள்ள சமத்துவபுரம்,அன்பு நகரை சேர்ந்தவர் ரங்கராஜ் ,இவரது மனைவி பண்ணாரி ( வயது 37 )இவர் முதன்முதலாக மந்திர சாமி என்பவரை திருமணம் செய்து இருந்தார் .பின்னர் அவரை விட்டு பிரிந்து ரங்கராஜை 2 – வது திருமணம் செய்து கொண்டார் .இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த பண்ணாரி நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் மாறாள் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர்லூர்துராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.