142 பவுன் தங்கம் மோசடி. நகைத் தொழிலாளிக்கு வலை

கோவை செப்டம்பர் 6 கோவை ராஜவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் லட்சுமி நரசிம்ம ராஜா ( வயது 46 )இவரது கடையில் கெம்பட்டி காலனி பாளைய ந்தோட்டத்தைச் சேர்ந்தநகைத் தொழிலாளி மனோகரன் என்பவர் 10 நாட்களில் நகை செய்து கொடுப்பதாக 142 பவுன் தங்கம் வாங்கினாராம்.அந்ததங்கத்தை நகை செய்து கொடுக்காமல் மனோகரன் மோசடி செய்து விட்டார் .இது குறித்து நகைக் கடை அதிபர் லட்சுமி நரசிம்ம ராஜா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.. போலீ சார் மனோகரன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.