மாமியாருக்கு கத்தி குத்து. மருமகன் கைது.

கோவைசெப்டம்பர் 6 கோவை போத்தனூர் மேட்டூர், புது வீதியைச் சேர்ந்தவர் செல்வா. இவரது மனைவி பூங்கொடி ( வயது 50) இவர்களது இளைய மகள் சசிகலாவுக்கு12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாகசசிகலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார் .இந்த நிலையில் சசிகலா அதே பகுதியைச் சேர்ந்த உமர் முகம்மது ( வயது 25) என்பவரைகடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி.உமர் முகம்மது செல்போனில் வேறு ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை சசிகலா கண்டித்தார். இதனால்அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த உமர் முகம்மது தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி வயிற்றில் எட்டி உதைத்தாராம் இது பற்றி தகவல் அறிந்ததும் சசிகலாவின் தாயார் பூங்கொடி அங்கு சென்றார் அவரையும் உ ம்மர் முகம்மது தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி, கத்தியால் குத்தினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . இது குறித்து பூங்கொடி சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உமர் முகமதுவை கைது செய்தனர் .அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.