கோவை செப்டம்பர் 8கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று இரவு காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில்அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நஜிபுல் ஹக் ( வயது 35) என்பது தெரியவந்தது.அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0