காதல் தகராறில்தொழிலாளிக்கு கத்தி குத்து

நண்பருக்கு வலை. கோவைசெப்டம்பர் 8 கோவை சரவணம்பட்டி அருகே உள்ள நல்லாம்பாளையம், பாலாஜி நகர் 3 -வது வீதியைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவப்பிரகாசம் (வயது 36 )லேத் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த இவரது நண்பர் மணி அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாராம். இதை சிவப்பிரகாசம் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக மணிநண்பர் சிவா என்ற சிவப்பிரகாசத்தை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மணியை தேடி வருகிறார்கள்..