கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்

கோவை செப்டம்பர் 9 பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் ” யூடியூப்பர் ” சவுக்கு சங்கர் மற்றும் அதனை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது கோவை மாநகரசைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். கோவை 4-வது ஜுடிசியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கில்சாட்சிகள் விசாரணை நடைபெறுகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் ஆஜரானார்கள்.வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதால் நேற்று சாட்சிகளிடம் விசாரணை நடைபெறவில்லை. வழக்கு விசாரணையை நீதிபதி அருண்குமார் வருகிற 23,ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.