போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தகவல்.கோவை செப்டம்பர் 9 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:- மாநகரில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க 24 மணி நேர ரோந்து திட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் நுண்ணறிவு போலீசாரும் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்ததாக கோவை விட்டு வெளியேற்றப்பட்ட ரவுடிகளில் பலர் 6 மாதம் முடிந்து கோவைக்குள் வந்துள்ளனர். அவ ர்களிடம் குற்ற செயலில் ஈடுபட மாட்டேன் என்று பிணைய பத்திரம் வாங்கும் பணி நடந்து வருகிறது. பிணைய பத்திரம் வாங்கிய நபர்கள் மீண்டும் ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அது தொடர்பாக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் இது தவிர மாநகரத்தில் பழைய ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 900 பேர் உள்ளனர் அந்த பழைய குற்றவாளிகள் தற்போது எப்படி உள்ளனர் ?குற்ற சம்பவத்தில் ஈடுபடுகிறார்களா ? அல்லது அமைதியாக உள்ளனரா ?என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது அதில் யார்? குற்றம் செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0