கோவை செப்டம்பர் 10 திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ரூபேஷ்குமார் (வயது 29 )ஹரினி (வயது 20) இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .இந்த நிலையில் அவர்கள் நண்பர்கள் உதவியுடன் நேற்று கோவைக்கு வந்தனர். பின்னர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பிறகுகாந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அத்துடன் ஹரினி குடும்பத்தினர் திண்டுக்கல் போலீசில் தன்னை கடத்திச் சென்று விட்டதாகபொய் புகார் கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்தனர் .இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0