கோஷ்டி மோதல் : 2 பேர் காயம் . 4 பேர் கைது

கோவை செப்டம்பர் 10 கோவை அருகே உள்ள நீலாம்பூர்,ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பேச்சிமுத்து ( வயது 55)இவருக்கும் வெள்ளலூர், இடையர்பாளையம், ஜெயப்பிரகாஷ் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி ( வயது 50)அவரது மகன் தமிழ்ச்செல்வன் ( வயது 28) ஆகியோர் சேர்ந்து பேச்சு முத்துவை மரக்கட்டையால் தாக்கினார்கள் .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பேச்சு முத்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் தமிழ்செல்வன் ஆகியோரைகைது செய்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ஜெயலட்சுமி போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .புகாரில் நிலத் தகராறு தொடர்பாக தன்னை பேச்சு முத்துவும் அவரது தம்பி அனுசாமியும் கட்டையால் தாக்கியதாக கூறியுள்ளார் இது தொடர்பாக போத்தனூர் போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ,