கோவை செப்டம்பர் 10 கோவை போத்தனூர் இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
போத்தனூர் இருப்பு பாதை காவல் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையும் இணைந்து இந்த கூட்டத்தை நடத்தியது. இதில்
ரயிலில் பயணம் செய்யும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்விழிப்புணர்வு வழங்கப்பட்டது. ரெயில் பயணத்தின் போது ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடி காவல் உதவிக்கு ரயில்வே ஹெல்ப்லைன் 1512.139ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் சிறுவர்கள் ரயில் போகும்போது ரயிலில் கல் மட்டும் பிற பொருள்களை எறிவது, தண்டவாளத்தில் கற்களை வைத்தல் போன்ற குற்றச்செயலில் ஈடுபடக்கூடாது என்று விழிப்புணர்வு செய்யப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0