பிசியோதெரபி செய்வதாக கூறி மாணவியிடம்பாலியல் பலாத்காரம்

போக்சோ வில் வாலிபரும் -உடந்தையாக இருந்த அத்தையும் கைது.கோவை செப்டம்பர் 11 கோவையை சேர்ந்த 18 வயது மாணவி. தற்போதுகோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தாயார் இறந்துவிட்டார். தந்தை பராமரிப்பில் இருந்து வருகிறார். இதனால் அவருடைய அத்தை அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து அந்த மாணவியை கவனித்துக் கொள்வார் .இந்த நிலையில் அந்த மாணவிக்கு 15 வயது இருந்த போது அவர் தனது அக்காளுடன் அத்தை வீட்டுக்குச் சென்றார். அப்போது அவருடைய அத்தை பிசியோதெரபி சிகிச்சை செய்தால் தான் நன்றாக இருக்கும் .எனவே பிசியோதெரபிஸ்ட் ஒருவரை அழைத்து வந்துள்ளேன்.நீங்கள் அந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு கூறினாராம் .முதலில் அந்த மாணவியின் அக்காவை அவருடைய அத்தை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு கோவையை சேர்ந்த சாகின் ( வயது 28) என்ற வாலிபர் இருந்தார் .அவர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் உடனடியாக அறையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார் .தொடர்ந்து அந்த மாணவியை அறைக்குள் அவருடைய அத்தை அழைத்து சென்றார். அப்போது அந்த வாலிபர் பிசியோதெரபி சிகிச்சை செய்வதாக கூறிஅவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம். மேலும் அந்த மாணவியின் அத்தையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி இந்த விஷயத்தை வெளியே சொல்லவில்லை இந்த நிலையில் அந்த மாணவி வெளியே தனியாக செல்லும் போது அவரை பார்க்கும் சாகின் தவறாக பேசியதுடன் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கோவையில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார் அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து அந்த மாணவியின் அத்தையை கடந்த வாரத்தில் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான வாலிபர் சாகினை நேற்று கைது செய்தனர் .தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.