கோவையில் கடந்த 8 மாதங்களில் ரெயிலில் அடிபட்டு 79 பேர் சாவு.

கோவை செப்டம்பர் 11 கோவையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ரெயிலில் அடிபட்டு 79 பேர் உயிரிழந்து உள்ளனர்.இது குறித்து ரெயில்வேபோலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- தண்டவாளத்தை கடக்க கூடாது. தண்டவாளம் அருகே செல்லக் கூடாது. என்று அதை ஒட்டி குடியிருந்து வரும் பகுதிகளை சேர்ந்த பொது மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருந்தபோதிலும் பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து தான் சென்று வருகிறார்கள். இதனால் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் கடைசி வரை 8 மாதத்தில் மட்டும் 79 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளனர் .இதில் 71 பேர் ஆண்கள் 8 பேர் பெண்கள் ஆவார்கள் .அதில் 4பேர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஆண்டில் 83 பேர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதில் 2 பேர் மட்டுமே தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஆண்டு 83 மற்றும் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டில் 8 மாதத்தில் மட்டும் 79 பேர் உயிரிழந்து உள்ளதால் உயிரிழப்பை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். தண்டவாளத்தை ஒட்டி தடுப்பு வேலி அமைத்தால் மட்டுமே இது போன்ற உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும்.. இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது அத்துடன் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்போது தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்வது கண்டுபிடிக்க விட்டால் அவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.