ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செல்போன் திருடிய 2பெண்கள் கைது

கோவை செப்டம்பர் 11 கேரள மாநிலம் பாலக்காடு மாங்காவு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் குமார் ( வயது 39)இவர் நேற்று தனது தாயாருடன் கோவைக்கு வந்திருந்தார்.தனியார் டவுன் பஸ்சில் காந்திபுரத்தில் இருந்து சாய்பாபா காலனி சென்று கொண்டிருந்தார்.மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி அருகே சென்ற போது இவரது தாயார் வைத்திருந்த செல்போனை அதேபஸ்சில் பயணம் செய்த 2 பெண்கள் நைசாக திருடினார்கள். இதை பார்த்து லோகேஷ் குமார் அந்த இரு பெண்களையும் கையும் களவுமாக பிடித்து சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தார்..போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அந்த பெண்கள் கேரள மாநிலம், பாலக்காடு ரயில் நிலையம் பகுதியில் வசித்து வரும் குமார் மனைவி நாகம்மாள் (வயது 20) மனோஜ் மனைவி அனிதா ( வயது 19) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.