குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து 12 கார்களை சேதப்படுத்திய போதை ஆசாமி கைது

கோவை செப்டம்பர் 12 கோவை,வடவள்ளி,மருதமலை மெயின் ரோட்டில் நேற்று இரவு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்தனர். சாலையில் அங்கும் இங்கும் ஒட்டியபடி 12 கார்களை உரசி சேதம் படுத்தினர். இது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். பின்னால் இருந்து வந்த வாலிபரை போக்குவரத்து போலீஸ்காரர் மடக்கிபிடித்தார். 12 கார்களை சேதப்படுத்தியது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் அந்த ஆசாமியை கைது செய்தனர்.மற்றொருவரை தேடி வருகிறார்கள்.