ஒப்பணக்கார வீதி மற்றும் கிராஸ்கட் பகுதிகளில் உள்ள போத்தீஸ் துணிக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரபல துணிக்கடையான போத்தீஸ் நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவை , மதுரை, நெல்லை உட்பட பல்வேறு பகுதிகளில் துணிக்கடைகளை நடத்தி வருகிறது. குறிப்பாக கோவையில் கிராஸ்கட் வீதியிலும், ஒப்பணக்கார வீதியிலும் துணிக்கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் முறையாக வருமான வரி தாக்கல் செய்யாமல் மோசடியில் ஈடுபடுவதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக கோவையில் உள்ள இரண்டு போத்தீஸ் துணி கடைகளிலும், வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 8 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு வாகனங்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை நேரத்தில் நடத்தப்படும் இந்த வருமான வரித்துறை சோதனை காரணமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.